அரசு கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழா
அரசு கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழா
பரமக்குடி
பரமக்குடி அரசு கல்லூரியில் உயிரி வேதியல் துறை சார்பில் உணவே மருந்து என்ற தலைப்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் குணசேகரன் தொடங்கி வைத்து மாணவர்களிடம் மருத்துவ உணவுகள் குறித்து கேட்டறிந்தார். உயிரி வேதியல் துறை தலைவர் ஆஷா தலைமை தாங்கினார். பேராசிரியர் ஜானகிராமன் வரவேற்றார். இதில் உணவே மருந்து என்ற தலைப்பின் அடிப்படையில் பாரம்பரியமிக்க உணவுகளை மாணவிகள் சமைத்து கண்காட்சியாக வைத்திருந்தனர். இவற்றை ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி மதன்குமார் பார்வையிட்டு பாராட்டினார். இதில் கல்லூரியின் துறை தலைவர்கள் ரேணுகாதேவி, மோகன கிருஷ்ணவேணி, பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பேராசிரியை உமாதேவி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story