பள்ளிபாளையத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்


பள்ளிபாளையத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
x

பள்ளிபாளையத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் ஒட்டமெத்தை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி தலைமை தாங்கினார். முகாமில் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், நகராட்சி, யோகா, இயற்கை வாழ்வியல் முறை உள்பட 10 துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ., ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, பள்ளிபாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் யுவராஜ், நகர செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் குமார், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செந்தில், நகர செயலாளர் வெள்ளியங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story