3 சக்கர ஸ்கூட்டர் கேட்டு மாற்றுத்திறனாளி தம்பதி கலெக்டரிடம் மனு
3 சக்கர ஸ்கூட்டர் கேட்டு மாற்றுத்திறனாளி தம்பதி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள என்.புதுப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 38). இவருடைய மனைவி பெரியம்மாள். மாற்றுத்திறனாளிகளான இவர்கள் இருவரும் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கண்ணன் கூறியிருப்பதாவது:-
நான் ஒரு மாற்றுத்திறனாளி. என் மனைவி கண் பார்வை அற்றவள். நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். நாங்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக பொரி மற்றும் பத்தி விற்பனையை பழைய ஸ்கூட்டரில் செய்து வந்தோம். அந்த ஸ்கூட்டரும் தற்போது பழுதடைந்து விட்டதால், நாங்கள் வேறு வேலை செய்ய முடியாமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வீட்டிலேயே இருக்கிறோம். எனவே தாங்கள், கருணை உள்ளத்தோடு எங்களுக்கு அரசின் 3 சக்கர ஸ்கூட்டர் கிடைக்க உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
Related Tags :
Next Story