திராவிடர் விடுதலை கழகம் சார்பில் முப்பெரும் விழா


திராவிடர் விடுதலை கழகம் சார்பில் முப்பெரும் விழா
x
தினத்தந்தி 27 April 2022 12:12 AM IST (Updated: 27 April 2022 12:12 AM IST)
t-max-icont-min-icon

திராவிடர் விடுதலை கழகம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.

ராசிபுரம்:
ராசிபுரம் நகர திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, ஆணவ படுகொலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த வக்கீல் மோகனுக்கு பாராட்டு விழா, ராசிபுரம் நகராட்சி முதல் பெண் தலைவர் மற்றும் பெண் உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா நடந்தது. திராவிடர் விடுதலை கழக நகர செயலாளர் பிடல் சேகுவாரா தலைமை தாங்கினார். நகர அமைப்பாளர் சுமதி மதிவதனி வரவேற்றார். தலைவர் கொளத்தூர் மணி நினைவு பரிசுகளை வழங்கி, சிறப்புரை ஆற்றினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த வக்கீல் மோகன் ஏற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக நகராட்சி தலைவர் கவிதா சங்கர், நகர தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர், தி.மு.க. முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.பாலு, நகர கூட்டுறவு வங்கி முன்னாள் இயக்குனர் சுந்தரம், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் மணிமாறன், தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட துணை செயலாளர் செங்கோட்டுவேல், நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராமுலு முரளி மற்றும் மகேந்திரன், பழனிசாமி, நாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மல்லசமுத்திரம் ஒன்றிய தி.வி.க. பொறுப்பாளர் பெரியண்ணன் நன்றி கூறினார்.

Next Story