திருமயத்தில் மஞ்சுவிரட்டு
திருமயத்தில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
திருமயம்:
திருமயம் அருகே துலையானூர் மங்களாநாச்சி அம்மன் மற்றும் அடைக்கலம் காத்தான் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஐந்து ஊரார்கள் சார்பில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் ஆத்தங்குடி, கோனபட்டு, திருப்பத்தூர், காரைக்குடி, திருமயம், பள்ளத்தூர் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் மற்ற காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. களத்தில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் விரட்டி மடக்கிப் பிடித்தனர். சில காளைகள் யாருக்கும் பிடிபடாமல் ஓடியது. இதில் காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். மஞ்சுவிரட்டை துலையானூரை சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு களித்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story