நாமகிரிப்பேட்டையில் ரூ.1¼ கோடிக்கு மஞ்சள் ஏலம்


நாமகிரிப்பேட்டையில் ரூ.1¼ கோடிக்கு மஞ்சள் ஏலம்
x
தினத்தந்தி 27 April 2022 12:21 AM IST (Updated: 27 April 2022 12:21 AM IST)
t-max-icont-min-icon

நாமகிரிப்பேட்டையில் 2,900 மூட்டை மஞ்சள் ரூ.1¼ கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

ராசிபுரம்:
மஞ்சள் ஏலம்
நாமகிரிப்பேட்டையில் செயல்பட்டு வரும் ராசிபுரம் வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு நாமகிரிப்பேட்டை, அரியாக்கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பபட்டி, புதுப்பட்டி, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த மஞ்சளை கொண்டு வந்தனர்.
ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் மற்றும் ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வந்த வியாபாரிகள் மஞ்சளை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். 
ரூ.1¼ கோடிக்கு விற்பனை
இந்த ஏலத்தில் விரலி ரகம் 2 ஆயிரத்து 100 மூட்டைகளும், உருண்டை ரகம் 750 மூட்டைகளும், பனங்காலி ரகம் 50 மூட்டைகளும் ஏலம் விடப்பட்டன. இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 143 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 443-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 999-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 399-க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.13 ஆயிரத்து 733-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.21 ஆயிரத்து 423-க்கும் ஏலம் விடப்பட்டது. 
மொத்தம் 2 ஆயிரத்து 900 மூட்டை மஞ்சள் ரூ.1 கோடியே 35 லட்சத்திற்கு விற்பனையானது.

Next Story