கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டம்
அருப்புக்கோட்டையில் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறவழிச்சாலையை இணைக்கும் இ-3 சாலையை திறக்க வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை சாலை, பஜார், எம்.எஸ்.கார்னர், திருச்சுழி ரோடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலக வாயிலில் கோரிக்கை மனுவை மக்கள் ஜனநாயக கட்சியினர் கழுதையிடம் வழங்கினர். இதில் மாநில குழு உறுப்பினர் பொன்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் பால்பாண்டியன், மாநில பொதுச்செயலாளர் சேதுமாதவன், மாநிலச்செயலாளர் கல்யாணசுந்தரம், ஒருங்கிணைப்பாளர் சங்கரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story