தேவகோட்டை யூனியன் சார்பில் ரூ.4½ லட்சம் மதிப்பில் நூலகத்திற்கு புத்தகங்கள்

தேவகோட்டை யூனியன் சார்பில் ரூ.4½ லட்சம் மதிப்பில் நூலகத்திற்கு புத்தகங்கள்
x
தினத்தந்தி 27 April 2022 12:28 AM IST (Updated: 27 April 2022 12:28 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை யூனியன் சார்பில் ரூ.4½ லட்சம் மதிப்பில் நூலகத்திற்கு புத்தகங்கள்

தேவகோட்டை, 
சிவகங்கையில் புத்தக திருவிழா நடைபெற்றது. இதில் பங்குகொண்டு தேவகோட்டை யூனியன் சார்பில் ரூ.4 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பில் நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கவும், புத்தக கண்காட்சிக்கு ரூபாய் ஒரு லட்சமும் என ரூ. 5 லட்சத்து 59 ஆயிரத்தை யூனியன் தலைவர் பிர்லா கணேசன் தலைமையில் சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் வழங்கினர். இந்த நிதியை யூனியன் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அனைத்து ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், யூனியன் அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் அனைவரும் இணைந்து வழங்கினர்.

Next Story