வேனில் கடத்திய 700 லிட்டர் மண்எண்ணெய்பறிமுதல்
குளச்சலில் வேனில் கடத்திய 700 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
குளச்சல்:
குளச்சலில்
வேனில் கடத்திய 700 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
செய்யப்பட்டது.
குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன் நேற்று காலையில் குளச்சல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அவர் குளச்சல் துறைமுக பகுதியில் உள்ள சோதனைச்சாவடி அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது, அதில் 20 பிளாஸ்டிக் கேன்களில் 700 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது. விசாரணையில், வேன் டிரைவர் தென்காசி மாவட்டம் வீராணம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(வயது 28) என்றும், அவருடன் வந்தவர் சாமியார்மடத்தை சேர்ந்த கிரிபிரசாத்(42) என்றும் தெரிய வந்தது. மீனவர்கள் வள்ளத்துக்கு பயன்படுத்தும் மண்எண்ணெயை இருவரும் கேரளாவுக்கு கடத்த முயன்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வேனுடன் மண்எண்ணெயை பறிமுதல் செய்து, அதை கடத்தி வந்த வேன் டிரைவர் உள்பட 2 பேரையும் பிடித்து கல்குளம் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story