பீரோவை உடைத்து 18 பவுன் நகை திருட்டு


பீரோவை உடைத்து 18 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 27 April 2022 12:34 AM IST (Updated: 27 April 2022 12:34 AM IST)
t-max-icont-min-icon

நரிக்குடி அருகே பீரோவை உடைத்து 18 பவுன் நகையை திருடி சென்றனர்.

காரியாபட்டி, 
நரிக்குடி அருகே பீரோவை உடைத்து 18 பவுன் நகையை திருடி சென்றனர். 
ஆதார் அட்ைட 
நரிக்குடி அருகே கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கற்பகவள்ளி (வயது 28). இவர் தனது 2 குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை எடுப்பதற்காக வீட்டின் கதவை பூட்டிவிட்டு சாவியை வீட்டின் முன்பு இருந்த கட்டிலில் மறைத்து வைத்தார். 
பின்னர் அவர் திருச்சுழி சென்று ஆதார் அட்டை எடுக்க சென்றார். இதையடுத்து மீண்டும் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் அருகே வெல்டிங்கடை வைத்திருக்கும் செல்லப்பாண்டி என்பவர் கற்பகவள்ளியிடம் வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதாக கூறினார். 
நகை திருட்டு 
இதையடுத்து கற்பகவள்ளி வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த 4 பீரோக்களும் உடைக்கப்பட்டு இருந்தததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன.
அத்துடன் பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து   கற்பகவள்ளி  அளித்த புகாரின் பேரில் நரிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து நரிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story