மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 27 April 2022 1:27 AM IST (Updated: 27 April 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

நெல்லை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் நெல்லை ஆச்சிமடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். 

அதில் அவர் பாளையங்கோட்டை அருகே உள்ள அவனாபேரி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 47) என்பதும், அவர் அந்த பகுதியில் மது விற்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 50 மதுபாட்டில்கள், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story