18 முதல் 59 வயதுடையோர் 3-வது தவணை தடுப்பூசியை தனியார் மருத்துவமனையில் செலுத்த வேண்டும் கலெக்டர் அரவிந்த் தகவல்
18 முதல் 59 வயதுடையோர் 3-வது தவணை தடுப்பூசியை தனியார் மருத்துவமனையில் செலுத்த வேண்டும் கலெக்டர் அரவிந்த் தகவல்
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-
நமது நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் சென்ற வாரத்தை விட இந்த வாரம் (ஒரு நாளில்) பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே நான்காவது கொரோனா தொற்று அலை ஏற்படும் பட்சத்தில் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மக்கள் அனைவரும், குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் தொற்றா நோய் போன்ற உபாதைகள் உள்ளவர்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
18 முதல் 59 வயதுடையோர் மூன்றாவது தவணை தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளில் ரூ.386.25 செலுத்தி போட்டுக் கொள்ளலாம். ஜெயசேகரன் மருத்துவமனை, ஸ்ரீமுகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் பெதஸ்தா மருத்துவமனை ஆகிய தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு தடுப்பூசி இருப்பில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலர்மேல்மங்கை, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story