மண்ணுளி பாம்பு விற்க முயன்ற 2 பேருக்கு அபராதம்


மண்ணுளி பாம்பு விற்க முயன்ற 2 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 27 April 2022 1:39 AM IST (Updated: 27 April 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே மண்ணுளி பாம்பு விற்க முயன்ற 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கடையம்:

கடையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட ராஜாங்கபுரத்தை சேர்ந்த ராமையா மகன் இசேந்திரகுமார், ரத்தினம் மகன் ராமர் ஆகிய 2 பேரும் மண்ணுளி பாம்பை பிடித்து விற்க முயற்சி செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த கடையம் வனச்சரக உதவி வனப்பாதுகாவலர் ராதை, வனவர் முருகசாமி, வனக்காப்பாளர் பெனாசீர் ஆகியோர், 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் செண்பகப்ரியா உத்தரவின்பேரில் 2 பேருக்கும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Next Story