புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது
பாளையங்கோட்டையில் புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவுப்படி நேற்று போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது பாளையங்கோட்டை ஐகிரவுண்டு பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட பாவூர்சத்திரம் கல்லூரணி மெயின் ரோட்டை சேர்ந்த ஜெயராம் (வயது 28), கடையம் மேலமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (35), முக்கூடலைச் சேர்ந்த ராஜ் (55) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மூட்டைகளில் கட்டி வைத்திருந்த ரூ.62,500 மதிப்புள்ள சுமார் 61 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் பாளையங்கோட்டை பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற விஸ்வ பிராமின் தெருவை சேர்ந்த சதக்கப்துல்லா (55) மற்றும் கனம்புள்ள நாயனார் தெருவை சேர்ந்த பரமசிவன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்தும் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story