குழிகளில் வாகன ஓட்டிகள் விழும் அபாயம்
குழிகளில் வாகன ஓட்டிகள் விழும் அபாயம்
பனைக்குளம்
ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதிகளான தேவிபட்டினம் முதல் ஆற்றாங்கரை வரை மங்கம்மாள் சாலை மற்றும் மழைக்காலங்களில் மழை வெள்ளம் செல்வதற்கான தரை பாலங்களும் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிக்காக தேவிபட்டினம் முதல் அத்தியூத்து வரை சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு இந்தப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. இதைத்தொடர்ந்து மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட தேர்போகி கிராமத்திலிருந்து ஆற்றாங்கரை வரை புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான குழிகள் தோண்டப்பட்டு அந்த மணலை சாலையின் ஓரங்களில் பரப்பி உள்ளனர். இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையின் அருகாமையில் உள்ள குழியில் விழும் நிலை உள்ளது. மேலும் பனைக்குளம் முதல் அழகன்குளம் வரை சாலை அருகில் குழி தோண்டப்பட்டு அதில் எடுக்கக்கடிய மணல்களை சாலையில் அருகாமையில் மேம்படுத்தி பரப்பி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான குழிகளை உடனடியாக மூட வேண்டும். இல்லையென்றால் நள்ளிரவில் மீன்படித்து இந்த வழியாக வரக்கூடிய வாகனங்களில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் குழியில் விழும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து உடனடி எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story