கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை


கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 27 April 2022 1:53 AM IST (Updated: 27 April 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே, குடும்ப தகராறில் வீட்டில் கணவனும், மனைவியும் தீக்குளித்து தற்கொைல செய்து கொண்டனர்.

சுரண்டை:
சுரண்டை அருகே, குடும்ப தகராறில் வீட்டில் கணவனும், மனைவியும் தீக்குளித்து தற்கொைல செய்து கொண்டனர்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கூலித்தொழிலாளி

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் ராதாகிருஷ்ணன் (வயது 32). கூலித்தொழிலாளி.

இவரது மனைவி மேனகா (38). இவர் தையல் வேலை செய்து வந்தார்.
மேனகாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது. அவருடைய முதல் கணவர் பிரிந்து சென்று விட்டார். இதனால் இரண்டாவதாக ராதாகிருஷ்ணனை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை.

தீக்குளித்து தற்கொலை

கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை கணவனும், மனைவியும் வீட்டில் இருந்தனர். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் திடீரென இருவரும் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டனர்.

இதில் உடல் கருகிய மேனகா அலறித் துடித்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
ராதாகிருஷ்ணனுக்கு உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

சோகம்

இந்த சம்பவம் குறித்து மேனகாவின் சகோதரர் ஜெயக்குமார் சேர்ந்தமரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்ப தகராறில் கணவனும், மனைவியும் விபரீத முடிவாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story