புகார் பெட்டி
புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் அளித்த கோரிக்கை விவரம் வருமாறு
பள்ளிக்கட்டிடம் விரைந்து கட்டி முடிக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் முள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் இருந்தது. இந்த பள்ளி கட்டிடம் கஜா புயலின் போது இடிந்து விழுந்தது. இதன்காரணமாக அந்த பள்ளியில் படித்து வந்த மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதைத்தொடர்ந்து இடிந்த பள்ளி கட்டிடத்துக்கு பதிலாக புதிதாக பள்ளி கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் தொடங்கப்பட்டு தற்போது வரை பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் அருகில் உள்ள கோவில் பகுதியில் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவ-மாணவிகளின் நலன் கருதி பள்ளி கட்டிடத்தை விரைந்து கட்டிமுடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், முள்ளூர்.
பாதாள சாக்கடை குழி மூடிசீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் தொம்பன்குடிசை பகுதியில் உள்ள நாகை சாலையின் நடுவே பாதாள சாக்கடை குழி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதாள சாக்கடை குழியின் மூடி உடைந்த நிலையில் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் குழியில் இருந்து துர்நாற்றம் வெளியேறுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் சாலை நடுவே பாதாள சாக்கடை குழி பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உடைந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடை குழி மூடியை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தஞ்சை.
Related Tags :
Next Story