அனுமதி இல்லாமல் மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
அனுமதி இல்லாமல் மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கோபி அருகே உள்ள கரட்டுபுதூர் ரோட்டில் உக்கரம் கிராம நிர்வாக அலுவலர் சபரிவாசன், கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் மோகனன் ஆகியோர் ரோந்து சென்றார்கள்.
அப்போது அந்த வழியாக மண் ஏற்றி வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்கள். சோதனையில் அனுமதி இல்லாமல் லாரியில் மண் ஏற்றி வந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் மண் ஏற்றி வந்த லாரியையும், மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரத்தையும் பறிமுதல் செய்து கடத்தூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்கள். மேலும் கேத்தம்பாளையத்தை சேர்ந்த டிரைவர்கள் வெங்கடாசலம் (வயது 35), தாசநாயக்கனூரை சேர்ந்த அரவிந்த் (22) ஆகியோரை கைது செய்தார்கள். லாரி உரிமையாளர் உக்கரத்தை சேர்ந்த இளையராஜா என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story