ரூ.19 கோடியில் வாய்க்கால், ஆறுகள் தூர்வாரும் பணி


ரூ.19 கோடியில் வாய்க்கால், ஆறுகள் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 27 April 2022 2:12 AM IST (Updated: 27 April 2022 2:12 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் ரூ.18.75 கோடியில்வாய்க்கால்கள், ஆறுகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றன என்று நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

திருச்சி, ஏப்.27-
திருச்சி மாவட்டத்தில் ரூ.18.75 கோடியில்வாய்க்கால்கள், ஆறுகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றன என்று நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் நேற்று தூர்வாரும் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நீர்வளத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு நேரடியாகவும், அரியலூர், பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்ட கலெக்டர்கள் காணொலி காட்சிமூலமாகவும் கலந்து கொண்டு மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு தூர்வாரும் பணிகளை எடுத்துரைத்தனர்.மேலும் மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து சந்தீப் சக்சேனா திருச்சி - வயலூர் சாலையில் உள்ள உய்யகொண்டான் வாய்க்காலில் நடைபெற்றுவரும்தூர்வாரும்பணிகளையும்,எடமலைப்பட்டிபுதூர் இரட்டை மலைப்பாதை கோரையாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளையும், துவாக்குடி சோளகம்பட்டியில் தூர்வாரும் பணியிைனயும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரூ.18.75 கோடி
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் இந்த ஆண்டு ரூ.80 கோடியில் 4,694 கிலோமீட்டர் தூரம் ஏ மற்றும் பி ரக வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 3 நாட்களுக்கு முன்பு இங்கு தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சித் துறை, வேளாண் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. உரிய நேரத்தில் தரமான பணிகளை எப்படி முடிப்பதுஎன்பதுகுறித்துதிட்டமிட்டு பணிகள்நடைபெறுகிறது.அடுத்தமாதம்(மே)31-ந்தேதிக்குள் அனைத்து தூர்வாரும் பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழுவின் முழுமையான கண்காணிப்பில் இந்த பணி நடைபெறுகிறது. ஆக்கிரமிப்பு உள்ள பகுதிகள்கண்டறியப்பட்டு அகற்றப்படும். மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்ட உடன் தங்கு தடையின்றி கடைமடை பகுதி வரைக்கும் தண்ணீர் சென்றடையும் வகையில் பணிகள் நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் 90 பணிகள் 232.59 கிலோ மீட்டர் தூரத்திற்குரூ.18.75கோடிமதிப்பீட்டில்தூர்வாரும்பணிகள்நடைபெறுகிறது. 5 வாரம் வரை தொடர்ந்து பணிகள் நடைபெறும். விவசாயிகளுக்கு முழு பயன் கிடைக்கும் வகையில் இடுபொருட்கள், தொழில்நுட்பங்கள், உரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story