ஆஞ்சநேயர் சிலையில் மோதியதில் வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்


ஆஞ்சநேயர் சிலையில் மோதியதில் வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 27 April 2022 2:15 AM IST (Updated: 27 April 2022 2:15 AM IST)
t-max-icont-min-icon

ஆஞ்சநேயர் சிலையில் மோதியதில் வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்

திருச்சி, ஏப்.27-
திருச்சி சுப்பிரமணியபுரம் ராஜா தெருவை சேர்ந்தவர் அண்ணாத்துரை மகன் ரோஷன் (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் பாலசந்தர் (27), மொய்தீன்கான் (24) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணி அளவில் சுப்பிரமணியபுரத்தில். இருந்து திருச்சி ஒத்தக்கடை நோக்கி வந்தனர். திருச்சி தலைமை தபால் நிலையம் சந்திப்பு பகுதியில் அவர்கள் அதிவேகமாக வந்த போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த ஆஞ்சநேயர் கோவில் முன் இருந்த சிலையில் மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். சிலையும் சேதம் அடைந்தது. இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், போலீஸ் ஏட்டு மலர்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு நேற்று மாலை சிகிச்சை பலனின்றி ரோஷன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் நள்ளிரவில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story