ரம்ஜான் பண்டிகையையொட்டி ஈரோடு சந்தையில் ஜவுளி விற்பனை அமோகம்
ரம்ஜான் பண்டிகையையொட்டி ஈரோடு சந்தையில் ஜவுளி விற்பனை அமோகமாக இருந்தது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி ஈரோடு சந்தையில் ஜவுளி விற்பனை அமோகமாக இருந்தது.
ஜவுளி சந்தை
ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறுவது வழக்கமாகும். இதற்கிடையில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு கடந்த சில வாரங்களாக நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி வியாபாரம் மிகவும் மந்த நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று நடைபெற்ற ஜவுளி சந்தையானது களை கட்டி காணப்பட்டது.
குறிப்பாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் அதிக அளவில் ஜவுளி சந்தைக்கு வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்தனர். இதே போல சில்லரை விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.
வியாபாரம் அமோகம்
இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-
ரம்ஜான் பண்டிகையையொட்டி இந்த வாரம் ஜவுளி சந்தையில் மொத்த மற்றும் சில்லரை வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. கடந்த பல வாரங்களுக்கு பின்னர் நேற்று கேரளா, ஆந்திராவில் இருந்து மொத்த வியாபாரிகள் வந்திருந்தனர். சேலை, வேட்டி, லுங்கி, ஜரிகை வேலைபாடுகள் கொண்ட சுடிதார்கள் அதிக அளவில் விற்பனையானது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிகமாக வந்திருந்தனர். உள்ளூர் பொதுமக்களின் வருகையும் வழக்கத்தை விட அதிகமாகவே காணப்பட்டது. மொத்த வியாபாரம் 40 சதவீதத்திற்கு மேலும், சில்லறை வியாபாரம் 60 சதவீதம் அளவிலும் நடந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story