கிணற்றில் மூழ்கி பலியான தொழிலாளி உடல் மீட்பு


கிணற்றில் மூழ்கி பலியான தொழிலாளி உடல் மீட்பு
x
தினத்தந்தி 27 April 2022 2:29 AM IST (Updated: 27 April 2022 2:29 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் மூழ்கி பலியான தொழிலாளி உடல் மீட்கப்பட்டது.

சங்ககிரி:-
சங்ககிரி அருகே அக்கமாபேட்டை அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ஆர்.கே.நகர் கிணற்றில் குளிக்க சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவர் கிணற்றில் மூழ்கி இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்மணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள்  கிணற்றில் இறங்கி தேடியும் முருகேசன் உடலை மீட்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று மின் மோட்டார் வைத்து கிணற்றில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று இரவு 8.30 மணியளவில் முருகேசனின் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story