கோட்டாட்சியர் அலுவலக ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது


கோட்டாட்சியர் அலுவலக ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 27 April 2022 2:49 AM IST (Updated: 27 April 2022 2:49 AM IST)
t-max-icont-min-icon

கோட்டாட்சியர் அலுவலக ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:

காதலிப்பதாக கூறி...
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் வெங்கட்ரமணன்(வயது 27). இவர் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர், 15 வயதுடைய 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் காதலிப்பதாக கூறி, தன்னை காதலிக்க வற்புறுத்தியதாகவும், மேலும் அந்த மாணவிக்கு பரிசுப் பொருட்கள் வைத்திருப்பதாக கூறி அந்த மாணவியை தன்னுடன் வருமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த மாணவி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
போக்கோவில் கைது
இருப்பினும் அந்த மாணவியின் வீட்டிற்கே சென்று மாணவியை பாலியல் சீண்டல் செய்ய வெங்கட்ரமணன் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வெங்கட்ரமணனை கைது செய்தார்.

Next Story