முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்


முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 27 April 2022 2:49 AM IST (Updated: 27 April 2022 2:49 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். இதில் விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்தவர்களின் பட்டாவை ரத்து செய்ய வேண்டும், இடம் வழங்க வேண்டும், போலீசார் வசம் உள்ள வண்டிப்பாதையில் இருந்து பொது அணுகு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கப்பட்டது. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருமண உதவி, கண் கண்ணாடி நிதி உதவி, மாதாந்திர நிதி உதவி என மொத்தம் 7 முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

Next Story