மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை


மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 27 April 2022 2:57 AM IST (Updated: 27 April 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை நடந்தது.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெண்பாவூர் வனப்பகுதியில் தண்ணீர் பந்தல் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பாலையூர் கிராம மக்கள் சார்பில் பொங்கல் வைத்து மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதைத்தொடர்ந்து இரவில் சுவாமி வீதி உலா, வாண வேடிக்கையுடன் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

Related Tags :
Next Story