அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை?


அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை?
x
தினத்தந்தி 27 April 2022 2:57 AM IST (Updated: 27 April 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாடாலூர்:

அ.தி.மு.க. பிரமுகர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் அருகே உள்ள நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 48). இவருக்கு பானுமதி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். முன்னாள் அ.தி.மு.க. கிளை செயலாளரான ரெங்கராஜ், நாரணமங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவரும் ஆவார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆலத்தூர்-புதுக்குறிச்சி சாலையில், தலையில் வெட்டு காயங்களுடன் ரெங்கராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அருகில் அவரது மோட்டார் சைக்கிள் கிடந்தது.
வெட்டிக்கொலை?
இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள், இதுபற்றி பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் ரெங்கராஜின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரெங்கராஜின் மனைவி பானுமதி கொடுத்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என பாடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரெங்கராஜ் வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story