சந்தைக்கு சென்ற பெண் மாயம்


சந்தைக்கு சென்ற பெண் மாயம்
x
தினத்தந்தி 27 April 2022 3:09 AM IST (Updated: 27 April 2022 3:09 AM IST)
t-max-icont-min-icon

சந்தைக்கு சென்ற பெண் மாயமானார்.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உடையவர் தீயனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி தனலெட்சுமி(வயது 28). இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளனர். சரத்குமார் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் தனது மாமனார், மாமியாரோடு ஒரே குடும்பமாக வசித்து வரும் தனலட்சுமி, கடந்த சனிக்கிழமை அன்று குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு விக்கிரமங்கலத்தில் நடைபெற்ற வாரச்சந்தைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்காததால், இது பற்றி தனலட்சுமியின் மாமானார் முருகேசன் விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமியை தேடி வருகிறார்.

Next Story