கோத்தகிரி மார்க்கெட் திடலில் பெயர்ப்பலகையை அகற்ற எதிர்ப்பு
கோத்தகிரி மார்க்கெட் திடலில் பெயர்ப்பலகையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜீப் டிரைவர்கள் பேரூராட்சி அலுவலகம் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி மார்க்கெட் திடலில் பெயர்ப்பலகையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜீப் டிரைவர்கள் பேரூராட்சி அலுவலகம் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெயர்ப்பலகையை அகற்ற முடிவு
கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் திடல் பகுதியில் ஜீப் ஸ்டேண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்டேண்டின் ஒரு ஓரத்தில் நீலமலை அனைத்து தொழிளர்கள் சங்க ஜீப் நிறுத்துமிடம் என பெயர்ப்பலகை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ் அனைத்தும் இந்த ஜீப் ஸ்டேண்ட் முன்புறம் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்ட தரைத்தளத்தில் நின்று பயணிகளை இறக்கி விட்டுச் சென்று வருகின்றன. இந்தநிலையில் ஜீப் ஸ்டேண்ட் பெயர் பலகை பயணிகள் பஸ்சிலிருந்து இறங்குவதற்கு இடையூறாக உள்ளது எனப் புகார் வந்துள்ளதாகக் கூறி பேரூராட்சி ஊழியர்கள் அந்த பெயர் பலகையை அகற்றுவதற்காக வந்தனர்.
பேச்சுவார்த்தை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜீப் டிரைவர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணி தலைமையில் செயல் அலுவலரை சந்திப்பதற்காக கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த செயல் அலுவலர் மணிகண்டன், அலுவலகத்திற்கு விரைந்து வந்து ஜீப் டிரைவர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் அந்த பெயர் பலகை அங்கிருந்து அகற்றப்படாது என செயல் அலுவலர் உறுதி அளித்தார். இதனால் சமாதானமடைந்த டிரைவர்கள் அங்கிருந்து சென்றனர்.
Related Tags :
Next Story