கலவை அருகே வைக்கோல் ஏற்றி வந்த வேன் எரிந்து நாசம்
கலவை அருகே வைக்கோல் ஏற்றி வந்த வேன் மீது மின் வயர் உரசியதில் எரிந்து நாசம் ஆனது.
கலவை
சித்தூர் மாவட்டம் பலமனேர் தாலுகா பை ரெட்டிபள்ளி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 23). இவர் கலவை அருகே உள்ள வேம்பி பகுதியில் இருந்து வேனில் வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு கலவைபுத்தூர் சாலையில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது மேலே சென்ற மின்வயர் வைக்கோல் பாரம் மீது உரசி தீப்பற்றிக் கொண்டது. உடனே டிரைவர் உதயகுமார் வேனை நிறுத்தி உள்ளார். அதற்குள் வேன் முழுவதும் தீ பற்றி எரிந்தது. அப்போது அங்கு வந்த கலவைபுத்தூரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் வேனின் ஒரு புறத்தில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு மறுபுறம் சென்று தீயை அணைக்க முற்பட்டுள்ளார்.
அப்போது எரிந்து கொண்டிருந்த வைக்கோல் சரிந்து மோட்டார்சைக்கிள் மீது விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளும் எரிந்து நாசமானது. இதுகுறித்து கலவை போலீஸ் நிலையத்தில் உதயகுமார் புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சரவணமுர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story