சாலை விரிவாக்கபணிக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்


சாலை விரிவாக்கபணிக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 27 April 2022 6:40 PM IST (Updated: 27 April 2022 6:40 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் சாலை விரிவாக்கபணிக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.

குடியாத்தம்

வேலூர் கோட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது. குடியாத்தம் உட்கோட்ட பராமரிப்பில் உள்ள மாநில நெடுஞ்சாலையான பள்ளிகொண்டா-பலமநேர் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக குடியாத்தம் பாலிடெக்னிக் கூட் ரோடு பகுதியில் இருந்து காட்பாடி ரோடு நான்கு முனை சந்திப்பு வரையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி  தொடங்கியது.

நெடுஞ்சாலைத்துறை வேலூர் கோட்ட பொறியாளர் எஸ்.எஸ். சரவணன் மேற்பார்வையில், குடியாத்தம் உதவி கோட்ட பொறியாளர் சம்பத்குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.  ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபின் சாலையில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு இரு புறங்களிலும் கழிவுநீர் கால்வாய்கள் கட்டி, சாலை விரிவாக்கம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story