ஆபாச படங்களை காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
ஆபாச படங்களை காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை ‘போக்சோ’ சிறப்பு அமர்வு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
வெளிப்பாளையம்:-
ஆபாச படங்களை காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை ‘போக்சோ’ சிறப்பு அமர்வு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
8 வயது சிறுமி
நாகை நம்பியார் நகர் நடுத்தெருவை சேர்ந்தவர் வெற்றிச்செல்வம் (வயது 27). மீனவர். இவர், கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியிடம் செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த சில ஆபாச படங்களை காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் நாகை அனைத்து மகளிர் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெற்றிச்செல்வத்தை கைது செய்தனர்.
10 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு நாகை ‘போக்சோ’ சிறப்பு அமர்வு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீதிபதி தமிழரசி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக வெற்றிச்செல்வத்துக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பாலியல் தாக்குதல் செய்த குற்றத்துக்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
சிறை தண்டனைகளை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் எனவும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 1½ ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி தமிழரசி பரிந்துரை செய்தார்.
இதையடுத்து வெற்றிச்செல்வம் போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
Related Tags :
Next Story