‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 April 2022 7:15 PM IST (Updated: 27 April 2022 7:15 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு
மின்விளக்கு எரிகிறது

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் சேர்வைக்காரன்பட்டி பஞ்சாயத்து கேளையாபிள்ளையூரை சேர்ந்தவர் வைரவிநாயகம். அவர், அங்குள்ள கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரியவில்லை என ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு நேற்று முன்தினம் செய்தியாக பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக மின்விளக்கு எரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தற்போது அங்கு மின்விளக்கு எரிகிறது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்ைக எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

அரசு ஆஸ்பத்திரிக்கு பஸ் வசதி
பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் கட்டபொம்மன் குடியிருப்பு பகுதியில் இருந்து ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு நேரடியாக பஸ் வசதி இல்லாததால் 2 பஸ்கள் ஏறிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் ெபாதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, மேற்கண்ட வழித்தடத்தில் பஸ் இயக்குவதற்கு அதிகாாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
புவனா, கே.டி.சி.நகர்.

பெயர் பலகை சரிசெய்யப்படுமா?
ராதாபுரம் தாலுகா தோட்டவிளை அருகே தூத்துக்குடி- கன்னியாகுமரி சாலையில் நம்பி ஆற்றங்கரை பாலத்திற்கு கிழக்கு பக்கம் பெயர் பலகை ஒன்று உள்ளது. அதில் ஆங்கிலத்தில் நம்பி ஆறு என்பதற்கு பதிலாக நம்பியார் ஆறு என தவறாக உள்ளது. வெளி மாநில பயணிகள் அதிகமாக வந்து செல்லும் சாலையாக உள்ளதால் குழப்பத்தை தவிர்க்க ஆங்கிலத்தில் சரியாக எழுதுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

ஆபத்தான மின்கம்பம்
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பஞ்சாயத்து துறையூரில் இருந்து ராஜபதி செல்லும் வழியில் மங்கம்மாள் சாலை அருகே உயர் அழுத்த மின்கம்பம் சாய்ந்து நிற்கிறது. எந்த நேரத்திலும் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, அந்த மின்கம்பத்தை நேராக நிறுத்தி வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேச்சிமுத்து, துறையூர்.

பஸ் வசதி தேவை
நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து தொழிலாளர் நலத்துறை அலுவலகத்துக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படாமல் இருந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் முன்பு போல் பஸ் இயக்கப்படவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் செல்ல வேண்டியுள்ளது. எனவே, புதிய பஸ்நிலையத்தில் இருந்து தொழிலாளர் நலத்துறை அலுவலகத்துக்கு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.திருக்குமரன், கடையம்.

தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா காரிசாத்தான் பஞ்சாயத்து புதுசுப்புலாபுரம் 2-வது வடக்கு தெருவில் வாறுகாலில் கழிவுநீர் சரியாக செல்ல முடியாமல் அடிக்கடி தேங்கி விடுகிறது. இதனால் தெருவில் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து வாறுகாலில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
ஆனந்தகுரு, புதுசுப்புலாபுரம்.

விபத்தை ஏற்படுத்தும் சாலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளத்தில் இருந்து சாலைப்புதூர் செல்லும் சாலை சரியாக பராமரிப்பு செய்யப்படவில்லை. இதனால் சாலை ஓரங்களில் குண்டும் குழியுமாக விபத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. மாலை நேரத்தில் சைக்கிளில் பள்ளிக்கூடம் சென்று வரும் மாணவ-மாணவிகள், பெரிய வாகனங்களுக்கு வழிவிடும்ேபாது பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். இச்சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சாலையோர பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பார்பொன்ராஜா, கருங்கடல்.

பஸ் வசதி
தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் இருந்து கூட்டாம்புளி, சேர்வைக்காரன்மடம் வழித்தடத்தில் இரவு நேரத்தில் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் வேலை முடிந்து செல்லும் மக்கள் பலரும் அவதிப்படுகிறார்கள். எனவே, இரவு 10 மணிக்கு மேல் ஒரு பஸ் இயக்கினால் மிகவும் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சந்தனகுமார், கூட்டாம்புளி.

Next Story