விளாத்திகுளம் அருகே மினி லாரியில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்: 3 பேர் கைது
விளாத்திகுளம் அருகே மினி லாரியில் 2டன் ரேஷன் அரிசி கடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் பகுதியில் ராமநாதபுரம் மாவட்டப் பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்டப்பகுதிக்கு ரேஷன் அரிசி அடிக்கடி கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து இந்த பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடவும், சந்தேகத்திற்கிடமான வாகனங்களை சோதனை நடத்தவும் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து இந்த பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று விளாத்திகுளம் அருகிலுள்ள சூரங்குடி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியசாமிபுரம் - சாயல்குடி செல்லும் வழியில் வந்த மினி லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த மினிலாரியில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரிய வந்தது. அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகரை சேர்ந்த முருகேசன் மகன் வேல்பாண்டி (வயது 22), நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கீழநத்ததைச் சேர்ந்த முனியசாமி மகன் அழகுமலை (18) மற்றும் சண்முகம் மகன் மாரிச்செல்வம் (23) ஆகியோரை கைது செய்தனர். கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த சூரங்குடி போலீசாரை விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் பாராட்டினார்.
Related Tags :
Next Story