ஆரணியில் ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் தீ வைத்து அழிப்பு
ஆரணியில் ரூ.5 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் தீ வைத்து அழித்தனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பல மாதங்களாக போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோர்ட்டு உத்தரவின்படி பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன், போலீஸ் ஏட்டு பரந்தாமன் ஆகியோர் முன்னிலையில் மங்களம் கிராமத்தில் உள்ள ஆரணி ஆற்றில் பள்ளம் தோண்டி அதில் கொட்டி தீவைத்து அழித்தனர்.
Related Tags :
Next Story