போதைப்பொருட்கள் விற்ற கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது; கேரளவை சேர்ந்தவர்கள்


போதைப்பொருட்கள் விற்ற கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது; கேரளவை சேர்ந்தவர்கள்
x
தினத்தந்தி 27 April 2022 8:11 PM IST (Updated: 27 April 2022 8:11 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்ற கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு எலகங்கா நியூடவுன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒரு தனியார் கல்லூரி அருகே போைதப்பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சந்தேப்படும் படியாக சுற்றிய 4 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் சோதனை நடத்தியபோது கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 4 பேரும் கைது செய்யப்பட்டார்கள். விசாரணையில், அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், பெங்களூருவில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.

  குறைந்த விலைக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை வாங்கி, அவற்றை சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயா்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது. 4 பேரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் பல்வேறு போதைப்பொருட்கள், 4 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். கைதான 4 பேர் மீதும் எலகங்கா நியூடவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட மற்றொரு மாணவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story