ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
திருவட்டார் அருகே ஆஸ்பத்திரியில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே ஆஸ்பத்திரியில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆஸ்பத்திரியில் அனுமதி
குழித்துறையை அடுத்த விளவங்கோடு வாத்தியார்விளையைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 55). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு ஜீஜா என்ற மனைவியும், 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக ரவீந்திரன் முதுகுவலியால் சிரமப்பட்டு வந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்றும் வலி குறைந்தபாடில்லை. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ரவீந்திரன் சிகிச்சைக்காக பூந்தோப்பில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
தற்கொலை
அங்கு ரவீந்திரன் சிகிச்சை பெறுவதற்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. இரவில் அந்த அறையின் ஒரு பகுதியில் ரவீந்திரன் மனைவி ஜீஜாவும் தூங்கினார்.
இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு ஜீஜா கண் விழித்து பார்த்த போது ரவீந்திரன் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார்.
பின்னர் இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவட்டார் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நோயின் கொடுமையால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story