கர்நாடக அரசை கண்டித்து முற்றுகை போராட்டம்
கர்நாடக அரசை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று பாசனதாரர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அதன் தலைவர் குரு.கோபி கணேசன் தலைமை தாங்கினார். பொருளாளர் மதியழகன் மற்றும் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட உளுந்து மற்றும் பயறு வகை பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். டி.கே.எம்-9 நெல்லுக்கு மாற்று நெல்ரகம் கண்டுபிடிக்கும் வரை தமிழக அரசு டி.கே.எம்-9 நெல் ரகத்தை கொள்முதல் செய்ய வேண்டும். காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசையும், அதை கண்டுகொள்ளாத மத்திய அரசையும் கண்டித்து வருகிற மே மாதம் 2-வது வாரத்தில் 200 விவசாயிகளுடன் சென்று மேகதாது பகுதியில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story