நடிகர் தனுசுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
நடிகர் தனுசுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
மதுரை, மேலூரைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவர்கள் கூறும் தகவல் உண்மை யானது இல்லை, எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது இரு தரப்பினரும் தனுஷின் பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ்களை தாக்கல் செய்தனர். விசாரணை முடிவில், கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை. எனவே தனுஷ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க போலீ சாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.
தன்னுடைய மனுவை கீழ்கோர்ட்டு தள்ளுபடி செய்த உத்தரவை சீராய்வு (மறுஆய்வு) செய்யக்கோரி கதிரேசன் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கு குறித்து, நடிகர் தனுஷ் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story