மனுநீதி நாள் முகாம்களில் 444 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
சென்னாவரம், உலகம்பட்டு, கஸ்தம்பாடியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 444 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அதிகாரிகள் வழங்கினர்.
வந்தவாசி
சென்னாவரம், உலகம்பட்டு, கஸ்தம்பாடியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 444 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அதிகாரிகள் வழங்கினர்.
சென்னாவரம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவுக்கு உட்பட்ட சென்னாவரம் மற்றும் பாதிரி ஆகிய கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் சென்னாவரம் கிராமத்தில் நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். தாசில்தார்கள் முருகானந்தம், சுபாஷ்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் 27 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, 70 பேருக்கு பட்டா மாற்றம், 35 பேருக்கு குடும்ப அட்டை, 24 பேருக்கு முதியோர் மற்றும் இதர உதவித்தொகை, 37 பேருக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரிய அட்டை, 5 பேருக்கு சலவைப்பெட்டி உள்பட 248 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி வழங்கினார்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் எஸ்.வீரராகவன், வெ.அரிகிருஷ்ணன், வந்தவாசி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மாரியம்மாள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
உலகம்பட்டு
சேத்துப்பட்டு தாலுகா உலகம்பட்டு, மருத்துவம்பாடி, கொத்தவாடி ஆகிய கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் உலகம்பட்டு கிராமத்தில் நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், சமூகநல தாசில்தார் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலகம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் வேல்விழி அறிவழகன் வரவேற்றார். முகாமில் 87 ேபருக்கு நலத்திட்ட உதவிகளை தனித்துணை கலெக்டர் வழங்கினார்.
மேலும் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு கைத்தெளிப்பான் மற்றும் உளுந்து விதை 5 பேருக்கு வழங்கப்பட்டது.
முகாமில் வருவாய் ஆய்வாளர் கன்னியப்பன், வேளாண்மை அலுவலர் இலக்கியா, தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலாஜி, உதவி தோட்டக்கலை அலுவலர் சுதாகர், மண்டல துணை தாசில்தார் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் கோமதி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
கஸ்தம்பாடி
போளூரை அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி பார்த்தீபன் தலைமை தாங்கினார். தாசில்தார் சண்முகம், ஊராட்சி மன்ற தலைவி பவுனுஅருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தாசில்தார் அருள் வரவேற்றார்.
முகாமில் 315 மனுக்கள் பெறப்பட்டு, 109 மனுக்கள் ஏற்கப்பட்டன. 54 மனுக்கள் தள்ளுபடியும், 152 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. அதைத் தொடர்ந்து 109 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி பார்த்தீபன் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் வேளாண்மை துறை அதிகாரிகள் சதீஷ்குமார், ராமு மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் அறிவழகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story