நெல் லாரிகளை மடக்கி போலீசார் சோதனை
திண்டுக்கல்லில், நெல் லாரிகளை மடக்கி போலீசார் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம் விவசாயிகள் எனும் போர்வையில், வியாபாரிகள் அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யும் வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க மாநிலம் முழுவதும் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி திண்டுக்கல் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் நேற்று திண்டுக்கல்-கரூர் புறவழிச்சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற 4 லாரிகளை மடக்கி சோதனையிட்டனர்.
அந்த லாரிகளில் சுமார் 80 டன் நெல் மூட்டைகள் இருந்தன. இதையடுத்து நெல் மூட்டைகள் முறையாக ஆவணங்களுடன் கொண்டு செல்லப்படுகிறதா? என்று சோதனையிட்டனர். அதில் ஆவணங்கள் இருந்ததால் லாரிகளை போலீசார் விடுவித்தனர்.
Related Tags :
Next Story