குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு
சிக்கமகளூரு தரிகெரேவில் குளத்தில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
சிக்கமகளூரு:
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா துக்லாபுரா கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவரது மனைவி விஜயகுமாரி. இந்த தம்பதிக்கு தனுஷ்(வயது 15) என்ற மகன் இருந்தான். தனுஷ், அதேப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை தனுஷ், அதேப்பகுதியை சேர்ந்த தனது நண்பன் சச்சின்(15) என்பவனுடன் சேர்ந்து கிராமத்தை ஒட்டியுள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளான்.
அப்போது சிறுவர்கள் 2 பேரும், குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக தெரிகிறது. இதனால் ஒரு கட்டத்தில் நிலைதடுமாறிய 2 பேரும் குளத்தில் மூழ்கி தத்தளித்து உள்ளனர். ஆனால் அப்போது அங்கு யாரும் இல்லையென கூறப்படுகிறது. இதனால் சிறிதுநேரத்தில் குளத்தில் மூழ்கி தனுசும், சச்சினும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தரிகெரே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story