நாகூர் பகுதியில் கரும்புச்சாறு விற்பனை மும்முரம்


நாகூர் பகுதியில் கரும்புச்சாறு விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 28 April 2022 12:15 AM IST (Updated: 27 April 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நாகூர் பகுதியில் கரும்புச்சாறு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

நாகூர்:-

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நாகூர் பகுதியில் கரும்புச்சாறு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. 

சுட்டெரிக்கும் வெயில்

நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. மதியம் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் வெயிலால் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். 
தினசரி வெளியே வேலைக்கு செல்வோர் வெயிலின் தாக்கத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள். 

கரும்புச்சாறு விற்பனை

நாகூர் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கரும்புச்சாறு விற்பனை செய்து வருகின்றனர். வெயில் சுட்டெரித்து வருவதால் இந்த பகுதியில் கரும்புச்சாறு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.  நாகூர் - நாகை செல்லும் சாலையில் ஏராளமான கரும்புச்சாறு கடைகளை காண முடிகிறது. ஒரு கப் கரும்புச்சாறு ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடும் வெயிலில் மருத்துவ குணங்கள் கொண்ட கரும்புச்சாறு அருந்துவது உடலுக்கு நல்லது என பொதுமக்கள் கூறுகின்றனர். 

புத்துணர்ச்சி

வேலை காரணமாக வாகனங்களில் செல்லும் பொது மக்களுக்கு கரும்புச் சாறு அருந்தி செல்லும் போது புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் பொதுமக்கள் மகிழ்சசி தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ராஜஸ்தானை சேர்ந்த கரும்புச்சாறு வியாபாரி கிருஷ்ணா கூறுகையில், ‘தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு சென்று கரும்பு வாங்கி வருகிறோம். ஒரு கிலோ கரும்பு கடந்த ஆண்டு ரூ.200-க்கு வாங்கினோம். இந்த ஆண்டு அதன் விலை ரூ.250 ஆகி விட்டது. மேலும் இந்த ஆண்டு 1 லோடு கரும்பு ரூ.10 ஆயிரத்துக்கு கிடைக்கிறது’ என்றார். 

Next Story