ஆட்டோவில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி; போக்சோ சட்டத்தில் சிறுவன் மீது வழக்கு


ஆட்டோவில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி; போக்சோ சட்டத்தில் சிறுவன் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 April 2022 10:26 PM IST (Updated: 27 April 2022 10:26 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் ஆட்டோவில் சிறுமி, குழந்தை பெற்றேடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி:
தேனி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு கடந்த 20-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அவர் ஒரு ஆட்டோவில் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் ஆட்டோவிலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அந்த சிறுமியும், குழந்தையும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமி தன்னுடன் பள்ளியில் படித்த 17 வயது சிறுவன் தன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். 
ஆனால் அந்த சிறுவனின் பெயர் மட்டுமே தனக்கு தெரியும் என்றும், அவருடைய ஊர் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தெரியாது என்றும் சிறுமி கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில், முகவரி தெரியாத சிறுவன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story