கிருஷ்ணகிரியில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 April 2022 10:27 PM IST (Updated: 27 April 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகம் முன்பு, குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சங்கர், தர்மபுரி மாவட்ட செயலாளர் நாகராஜன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க கூடாது. பின்பாக்கி ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் செந்தில்குமார் நன்றி கூறினார். 

Next Story