தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 27 April 2022 10:28 PM IST (Updated: 27 April 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள குரியனப்பள்ளியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 35). கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இது குறித்து அவருடைய மனைவி கேட்டார். இதில் மனமுடைந்த மாரிமுத்து கடந்த 25-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே மாரிமுத்து இறந்து விட்டார். இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story