பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து அபேஸ் செய்த ரூ.4¼ லட்சம் மீட்பு
பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து அபேஸ் செய்த ரூ.4¼ லட்சம் மீட்கப்பட்டது.
கிருஷ்ணகிரி:
போச்சம்பள்ளி அருகே உள்ள கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவரை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் வங்கி அதிகாரி போல் பேசி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்து 275-ஐ அபேஸ் செய்தார். இதுகுறித்து உமா மகேஸ்வரி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் அருண்நேரு மற்றும் சைபர் கிரைம் போலீசார் விரைவாக செயல்பட்டு உமா மகேஸ்வரி இழந்த பணத்தில் இருந்து ரூ.4 லட்சத்து 29 ஆயிரத்து 300-ஐ மீட்டனர். அவ்வாறு மீட்கப்பட்ட பணத்தை உமாமகேஸ்வரியிடம் போலீசார் நேரில் வழங்கினர்.
Related Tags :
Next Story