பாப்பாரப்பட்டி, தர்மபுரியில் ஜனநாயக வாலிபர் சங்க பிரசார குழுவுக்கு வரவேற்பு
பாப்பாரப்பட்டி, தர்மபுரியில் ஜனநாயக வாலிபர் சங்க பிரசார குழுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாப்பாரப்பட்டி:
ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பிரசாரம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தொடங்கி பாலக்கோடு, பாப்பாரப்பட்டிக்கு வந்தது. இந்த பிரசார குழுவுக்கு ஜனநாயக வாலிபர் வட்டார தலைவர் சிலம்பரசன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தர்மபுரிக்கு வந்த பிரசார குழுவுக்கு சங்க தர்மபுரி மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ், முகிலன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர்கள் அரசு துறைகளில் காலிபணியிடங்களை நிரப்பவேண்டும். நகர்புறவேலை உறுதி திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடையே பிரசாரம் மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் நாகராசன், மாவட்ட தலைவர் ஜீவா, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அர்ஜூனன், மாவட்ட நிர்வாகி மல்லையன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மாதர் சங்க மாவட்ட செயலாளர் கிரைஸாமேரி, மாவட்ட தலைவர் ஜெயா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு சைக்கிள் பிரசார பயணம் மே மாதம் 1-ந் தேதி திருச்சியில் நிறைவடைகிறது.
Related Tags :
Next Story