பொம்மிடி அருகே எலக்ட்ரீசியன் வீட்டில் நகை பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பொம்மிடி அருகே எலக்ட்ரீசியன் வீட்டில் நகை பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 27 April 2022 10:29 PM IST (Updated: 27 April 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

பொம்மிடி அருகே எலக்ட்ரீசியன் வீட்டில் நகை, பணத்தை திருடிசென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மொரப்பூர்:
பொம்மிடி அருகே எலக்ட்ரீசியன் வீட்டில் நகை, பணத்தை திருடிசென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
எலக்ட்ரீசியன்
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள பில்பருத்தி சாய் நகரை சேர்ந்தவர் தன் கதிர் செல்வன் (வயது 47). இவர் தனியார் கல்லூரியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் இனியன். அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி 2 பேரும் மகனை பள்ளிக்கு அனுப்பிய பின்னர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். மாலை பள்ளிக்கு சென்ற சிறுவன் வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து சிறுவன் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தான். 
நகை, பணம் திருட்டு
அதன்பேரில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சம், 1¼ தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து தன் கதிர் செல்வன் பொம்மிடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு  தடயங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story