நாளை மறுநாள் அமாவாசையன்று மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது கலெக்டர் அறிவிப்பு


நாளை மறுநாள் அமாவாசையன்று மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 April 2022 10:34 PM IST (Updated: 27 April 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

நாளை மறுநாள் அமாவாசையன்று மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது என்று கலெக்டர் தொிவித்துள்ளாா்.


விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை விழாவில் பக்தர்கள் அதிகளவில் வருகை தந்து ஊஞ்சல் உற்சவ சேவையை கண்டு தரிசனம் செய்வது வழக்கத்தில் இருந்து வருகிறது.

 இந்நிலையில் இம்மாதம் நடைபெறும் அமாவாசை நாளான நாளை மறுநாள் (சனிக்கிழமையன்று) இரவு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சித்திரை கரகம் வீதிஉலா நடைபெற உள்ளதால் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

Next Story