கழுத்தை நெரித்து பெண் படுகொலை
சின்னமனூர் அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
பெண் மர்ம சாவு
தேனி மாவட்டம் சின்னமனூர் அழகர்சாமி நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 45). பெயிண்டர். இவரது மனைவி பிரபா (34). இவர் சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் டெய்லராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ராகவன் (16), பிரவீன் (14) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பிரபா மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னமனூர் போலீசார், பிரபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பிரபாவின் தந்தை ஜெயராமன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கள்ளக்காதல்
இதற்கிடையே மருத்துவமனையில் இருந்து பிரபாவின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வந்தது. அதில், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டனர். சந்தேகத்தின்பேரில் அவரது கணவர் ராஜேஷ்குமாரை பிடித்து விசாரித்ததில், அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார்.
இதனால் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது பல்ேவறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பிரபா, தான் வேலை பார்க்கும் நூற்பாலைக்கு பதிவாக ஒரே ஆட்டோவில் சென்று வந்தார். அப்போது அவருக்கும், ஆட்ேடா டிரைவரான கோட்டூரை சேர்ந்த பிரசாத் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக உருவானது. இந்த விஷயம் ராஜேஷ்குமாருக்கு தெரியவந்தது. இதனால் தனது மனைவியை அவர் கண்டித்தார். இருப்பினும் அவர் தனது கள்ளக்காதலை தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
கணவர் கைது
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை ராஜேஷ்குமார், கள்ளக்காதலை கைவிடுமாறு கூறி பிரபாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கணவன்-மனைவி 2 பேரும் வேலைக்கு செல்லவில்லை. அவர்களது மகன்கள் வழக்கம்போல் பள்ளிக்கூடத்திற்கு சென்றுவிட்டனர்.
இந்தநிலையில் மதியம் 2 மணி அளவில் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ராஜேஷ்குமார் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் தனது மனைவி மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறி நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் சின்னமனூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story